பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படை தர உத்தரவாத மாநாட்டை நடத்துகிறது
Posted On:
04 FEB 2025 4:56PM by PIB Chennai
'கூட்டுத் தர உத்தரவாதம்: தொழில்துறைக்கும் பாதுகாப்புத் துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தல்' என்ற கருப்பொருளில் தர உத்தரவாத (QA) மாநாடு புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மாநாட்டு மையத்தில் 07 பிப்ரவரி 2025 அன்று நடைபெற உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்திச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு உத்திசார் தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறவுள்ளது. பாதுகாப்புத் துறைக்கும் கப்பல் கட்டும் துறைக்கும் இடையிலான உரையாடலை வளர்ப்பதற்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கிய மன்றமாக இந்த மாநாடு செயல்படும்.
தற்சார்பு இந்தியா என்ற மத்திய அரசின் பார்வையை இந்த மாநாடு வலுப்படுத்தும். உலகத்தரம் வாய்ந்த தரங்களை பூர்த்தி செய்யும் ஒரு வலுவான, தற்சார்பு கப்பல் கட்டும் தொழில்துறையை உருவாக்குவது குறித்து இதில் ஆலோசிக்கப்படும்.
இந்தியாவின் கப்பல் கட்டும் துறையானது தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த நிகழ்வு அரசு, தொழில்துறை, தர உத்தரவாத நிபுணர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும்.
செயல்திறன் மிக்க தரக் கட்டுப்பாடு, தொழில்துறையுடன் ஒத்துழைப்பு, பேரிடர் தணிப்பு உத்திகளை ஒழுங்குபடுத்துதல், கப்பல் கட்டுதலில் தர உத்தரவாதம், தாமதங்கள் தவிர்ப்பு போன்றவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
------
TS/PLM/KPG/DL
(Release ID: 2099863)
Visitor Counter : 24