கலாசாரத்துறை அமைச்சகம்
சமன் அரோராவுக்கு “இக் ஹோர் அஸ்வத்தாமா” என்ற டோக்ரி மொழி புத்தகத்திற்கு 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது
Posted On:
04 FEB 2025 6:35PM by PIB Chennai
இக் ஹோர் அஸ்வத்தாமா (சிறுகதைகள்) என்ற டோக்ரி மொழி நூலுக்காக அதன் ஆசிரியர் மறைந்த சமன் அரோராவுக்கு 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்க சாகித்ய அகாடமி தலைவர் திரு மாதவ் கௌசிக் ஒப்புதல் அளித்துள்ளார். வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அடிப்படையில் இந்தப் புத்தகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டோக்ரி மொழியில் 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை டாக்டர் சுஷ்மா ராணி, டாக்டர் வீணா குப்தா, டாக்டர் ஜிதேந்திர உதம்புரி ஆகியோரை கொண்ட நடுவர் குழு பரிந்துரைத்தது.
விருது பொறிக்கப்பட்ட செப்புத் தகடு, ரூ.1,00,000/- ரொக்கப் பரிசு ஆகியவை விருது பெற்றவரின் குடும்ப உறுப்பினர்/பரிந்துரைக்கப்பட்டவருக்கு 2025 மார்ச் 8 அன்று புது தில்லியில் நடைபெறும் சிறப்பு விழாவில் வழங்கப்படும்.
-----
TS/IR/RR/KR/DL
(Release ID: 2099860)
Visitor Counter : 27