மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாதிரி மீனவர் கிராமங்களை மேம்படுத்துதல்

Posted On: 04 FEB 2025 4:12PM by PIB Chennai

மத்திய மீன்வளத்துறையால் செயல்படுத்தப்படும் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டம், கடலோர மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த நவீன கடலோர மீன்பிடி கிராமங்களை உருவாக்க உதவி அளிக்கிறது. கடலோர மீனவர் கிராம மேம்பாட்டிற்கான  தொகையை மத்திய மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் தொகையை மத்திய அரசு 100 சதவீதம் முழுமையாக ஏற்கிறது.

மத்திய மீன்வளத்துறை கடலோர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்து, கடலோரப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள மொத்தம் 100 கடலோர மீனவ கிராமங்களை துடிப்பான மீனவ கிராமங்களாக உருவாக்க அடையாளம் கண்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 16 மீனவர் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் ஒருங்கிணைப்பு முகமையாக நியமிக்கப்பட்டுள்ளது. கண்டறியப்பட்டுள்ள 100 கடலோர கிராமங்களை ரூ.200 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மீன் உலர் களங்கள், பதனிடும் நிலையங்கள், மீன் சந்தைகள், மீன்பிடி இறங்குதளம், பனிக்கட்டி நிலையம், குளிர்பதன கிடங்கு, அவசரகால மீட்பு வசதிகள் போன்ற வசதிகள் மற்றும் கடற்பாசி வளர்ப்பு போன்ற பணிகளும் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

-----

TS/PLM/KPG/DL


(Release ID: 2099853) Visitor Counter : 34


Read this release in: English , Urdu , Hindi