ஜவுளித்துறை அமைச்சகம்
பாரத் டெக்ஸ் கண்காட்சி-2025 உலகளாவிய ஜவுளி மையமாக இந்தியா மாறுவதற்கான வாய்ப்பாக அமையும்: மத்திய ஜவுளித் துறைச் செயலாளர்
प्रविष्टि तिथि:
04 FEB 2025 4:52PM by PIB Chennai
பாரத் டெக்ஸ்- 2025 கண்காட்சிக்கான செயலியும் இணையதளமும் புதுதில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2024-ம் ஆண்டில் முதல் பதிப்பின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆண்டு பாரத் டெக்ஸ் நடத்தப்படுகிறது. 2025 பிப்ரவரி 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நான்கு நாட்கள் புது டெல்லியில் இந்த பாரத் டெக்ஸ் கண்காட்சியும் மாநாடும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் விரிவான அரங்கங்கள் இடம்பெறும். இவை முழு ஜவுளி மதிப்புக் கூட்டப்பட்ட சங்கிலித் தொடரையும் ஒரே குடையின் கீழ் காட்சிப்படுத்தும்.
மத்திய ஜவுளித்துறை செயலாளர் திருமதி நீலம் ஷமி ராவ், பாரத் டெக்ஸ் 2025-ஐ ஏற்பாடு செய்வதில் ஜவுளித்துறை அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார். இது மிகப்பெரிய, மிக விரிவான ஜவுளி நிகழ்வு என்று அவர் கூறினார். ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்கள், பிற தொழில் அமைப்புகளின் அயராத முயற்சிகளை அவர் பாராட்டினார். பாரத் டெக்ஸ் நம்பகமான, நிலையான இடமாகவும், ஜவுளிகளுக்கான முதலீட்டு இடமாகவும் இந்தியாவின் நிலையை மீண்டும் உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார். பாரத் டெக்ஸ் 2025 செயலி, இணையதளம் ஆகியவற்றையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
ஜவுளித்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் 11 முக்கிய ஜவுளித் தொழில் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரத் டெக்ஸ் 2025, இந்தியாவின் ஜவுளித் துறையின் பன்முகத்தன்மை, திறன் ஆகியவற்றை எடுத்துக் காட்டும் ஒரு மைல்கல் நிகழ்வாக இருக்கும். 2.2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு 5,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களையும், 120 நாடுகளைச் சேர்ந்த 6,000 சர்வதேச வாங்குபவர்களையும், 1,20,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்காட்சியாளர்கள் ஆடைகள், சாயங்கள், ரசாயனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள், தொழில்நுட்ப ஜவுளி, கைத்தறி, கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவார்கள்.
இந்த நிகழ்வில் 70 க்கும் மேற்பட்ட மாநாட்டு அமர்வுகள் இடம்பெறும். இதில் கிட்டத்தட்ட 100 சர்வதேச பேச்சாளர்கள் தலைமையில் விவாதங்கள் நடைபெறும்.
----
TS/PLM/KPG/DL
(रिलीज़ आईडी: 2099819)
आगंतुक पटल : 110