சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: மாற்றுத்திறனாளிகளின் அதிகாரமளிப்புக்கான முயற்சிகள்
प्रविष्टि तिथि:
04 FEB 2025 4:58PM by PIB Chennai
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளின் அதிகாரமளித்தல் துறை, 2024-ம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தைக் கொண்டாடி, இந்தியா முழுவதும் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்த 16 புதிய முயற்சிகளைத் தொடங்கியது. இந்த முயற்சிகள் மூலம், ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் சமவாய்ப்புகள், அணுகல் மற்றும் அதிகாரமளிப்பதை உறுதி செய்வதை துறை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொலைதூர அல்லது பின்தங்கிய பகுதிகளில் உள்ளவர்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த முயற்சிகள் குறித்து தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அச்சு, மின்னணு, டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு பி.எல். வர்மா இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099647
***
PKV/AG/DL
(रिलीज़ आईडी: 2099815)
आगंतुक पटल : 52