ஜவுளித்துறை அமைச்சகம்
தொழில்நுட்ப ஜவுளித் துறையில் 04 புத்தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
04 FEB 2025 5:01PM by PIB Chennai
தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் 10-வது அதிகாரமளிக்கப்பட்ட திட்டக் குழுக் கூட்டத்திற்கு ஜவுளி அமைச்சக செயலாளர் தலைமை தாங்கினார்.
'தொழில்நுட்ப ஜவுளித் துறையில் ஆர்வமுள்ள புதுமையாளர்களிடையே ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவோருக்கான மானியம்' திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 50 லட்சம் மானியத்துடன் கூடிய 04 புத்தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் திட்டங்கள் மருத்துவ ஜவுளி, தொழில்துறை ஜவுளி மற்றும் பாதுகாப்பு ஜவுளித் துறைகளின் முக்கிய உத்தி சார்ந்த பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன.
'தொழில்நுட்ப ஜவுளித் துறையில் கல்வி நிறுவனங்களை செயல்படுத்துவதற்கான பொதுவான வழிகாட்டுதல்கள்' என்பதன்கீழ் தொழில்நுட்ப ஜவுளித் துறையில் படிப்புகளை அறிமுகப்படுத்த 03 கல்வி நிறுவனங்களுக்கு சுமார் ரூ. 6.5 கோடி மானியத்திற்கும் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஐஐடி இந்தூர், என்ஐடி பாட்னா ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் அடங்கும். புதிய நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டத்தில் ஜியோடெக்ஸ்டைல்ஸ், ஜியோசிந்தெடிக்ஸ், பாதுகாப்பு ஜவுளி, விளையாட்டு ஜவுளி போன்ற பாடங்களை அறிமுகப்படுத்தும்.
மேலும், மருத்துவ ஜவுளி, பாதுகாப்பு ஜவுளி, வேளாண் ஜவுளித் துறைகளில் 12 திறன் மேம்பாட்டு பாடநெறிகளும் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடநெறிகள் 03 ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
***
TS/IR/RR/KR/DL
(Release ID: 2099802)
Visitor Counter : 28