விவசாயத்துறை அமைச்சகம்
ரபி பயிர் விதைப்பு 661.03 லட்சம் ஹெக்டேரைத் தாண்டியுள்ளது
Posted On:
04 FEB 2025 2:28PM by PIB Chennai
2025 பிப்ரவரி 4-ம் தேதி நிலவரப்படி ரபி பயிர்கள் சாகுபடி பரப்பளவின் முன்னேற்றத்தை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 318.33 லட்சம் ஹெக்டேராக இருந்த கோதுமை சாகுபடி பரப்பளவு, இந்த ஆண்டு இதுவரை 324.38 லட்சம் ஹெக்டேராக உள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 42.54 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இது 40.59 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் இருந்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 137.80 லட்சம் ஹெக்டேரில் பயறு வகைகள் பயிரிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 140.89 லட்சம் ஹெக்டேரில் பயறு வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.
சிறு தானியங்கள் இந்த ஆண்டு 55.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
அனைத்து பயிர்களும் மொத்தம் 661.03 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இது 651.42 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
----
TS/PLM/KPG/KR/DL
(Release ID: 2099790)
Visitor Counter : 17