விவசாயத்துறை அமைச்சகம்
மக்கானா-வுக்கான தேசிய ஆராய்ச்சி மையம்
Posted On:
04 FEB 2025 1:33PM by PIB Chennai
தர்பங்காவில் உள்ள மக்கானா-வுக்கான தேசிய ஆராய்ச்சி மையம் (NRCM), திறமையான விஞ்ஞானிகள் குழுவால் செயல்படும் ஆராய்ச்சி அமைப்பாகும். அதிக மகசூல் தரும் மக்கானா வகைகளை உருவாக்குதல், நீர் திறனையும் ஒருங்கிணைந்த விவசாய முறைகளையும் அறிமுகப்படுத்துதல் போன்றவை இதன் முக்கிய பணிகளில் அடங்கும். இந்தியத் தாமரை சாகுபடி முறைகள், அகோரஸ் கலமஸ், அலோகாசியா மொன்டானா போன்ற மருத்துவ தாவரங்கள் தொடர்பான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மக்கானா தொடர்பான பல்வேறு வகையான மதிப்புக் கூட்டுத் தயாரிப்புகள், மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்திகளுக்கான பல உபகரணங்கள், இயந்திரங்கள் போன்றவை இங்கு வடிவமைக்கப்பட்டு உற்பத்தியாளர்களுக்கு வர்த்தகமயமாக்கலுக்காக உரிமம் வழங்கப்பட்டுள்ளன. மக்கானா-வுக்கான தேசிய ஆராய்ச்சி மையம் (என்ஆர்சிஎம்) ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழில்முனைவோருக்கு பயிற்சி அளித்து, பிராந்திய தொழில்களையும் வாழ்வாதாரங்களையும் ஊக்குவிக்கிறது. மக்கானா சாகுபடி பல மாநிலங்களில் சுமார் 13,000 முதல் 35,000 ஹெக்டேர் வரை நடைபெறுகிறது.
2012-ம் ஆண்டுக்கும் 2023ம் ஆண்டுக்கும் இடையில், என்ஆர்சிஎம் 3,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மேம்பட்ட மக்கானா சாகுபடி, செயலாக்கம், சந்தைப்படுத்தல் நுட்பங்களில் பயிற்சி அளித்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் துறை இணையமைச்சர் திரு பகீரத் சௌத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
-----
(Release ID: 2099490)
TS/PLM/KPG/KR
(Release ID: 2099637)
Visitor Counter : 22