நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி அமைச்சகம் சார்பாக சிந்தனை அரங்கம் 2.0

Posted On: 03 FEB 2025 4:48PM by PIB Chennai


மத்திய நிலக்கரி அமைச்சகம், 07.01.2025 அன்று சிந்தனை அரங்கம் 2.0விற்கு ஏற்பாடு செய்திருந்தது. நிலக்கரி துறையை தேசத்தின் எரிசக்தி மாற்றத்தில் முக்கிய பங்களிப்பாளராக மாற்றுவது, உற்பத்தியை  மேம்படுத்துவது, தூய்மையான தொழில்நுட்பங்களை  ஒருங்கிணைப்பது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நிலக்கரி வாயுவாக்கம் போன்ற புதுமையான தொழில்நுட்பங்கள் மூலம் கார்பன் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க கடுமையான பாதுகாப்புத் தரங்களுடன் கூடிய நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் நிலைத்தன்மைக்கான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுதல் உள்ளிட்ட உலகளாவிய நிலைத்தன்மை இலக்குகளுடன் நிலக்கரி சுரங்க நடைமுறைகளை சீரமைக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. 

நிகழ்ச்சியின் போது சுரங்க நடவடிக்கைகளில் பாதுகாப்பின் முக்கியத்துவம் விவாதிக்கப்பட்டது, இது அனைத்து பங்குதாரர்களுக்கும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லாத முன்னுரிமையாக வலியுறுத்தப்பட்டது. நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் பங்குதாரர்கள் அதிநவீன தொழில்நுட்பங்களை பின்பற்றவும், தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்கவும் அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் கடுமையான பாதுகாப்புத் தரங்களைச் செயல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

சுரங்கச் சட்டம், 1952-இன் கீழ் உள்ள சட்ட விதிகளுக்கு இணங்குவதைத் தவிர, சுரங்கங்களில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதைக் குறைக்க சுரங்க விதிகள், 1955, நிலக்கரிச் சுரங்க ஒழுங்குமுறைகள், 2017 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட துணைச் சட்டங்கள் மற்றும் நிலையான ஆணை ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. கூடுதலாக, நிலக்கரி நிறுவனங்கள் பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் சுரங்கங்களை நிர்வகிக்கின்றன:

1. தளம் சார்ந்த இடர் மதிப்பீடு அடிப்படையிலான பாதுகாப்பு மேலாண்மைத் திட்டங்கள், முதன்மை அபாயங்கள் மேலாண்மைத் திட்டங்கள், தளம் சார்ந்த இடர் மதிப்பீட்டின் அடிப்படையிலான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்குதல் மற்றும் இணங்குதல்.

2. சுரங்கப் பாதுகாப்பு குறித்த பயிற்சி: ஆரம்ப மற்றும் புதுப்பித்தல் பயிற்சி, சட்டத்தின்படி பணியிடத்தில் பயிற்சி, சிமுலேட்டர்கள் குறித்த பயிற்சி, முன்னணி சுரங்க அதிகாரிகளின் திறன் மேம்பாடு, பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு.

3. டிசம்பர் 2023 இல் நிலக்கரி அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி சுரங்கங்களின் பாதுகாப்பு தணிக்கையை பல ஒழுங்குமுறை பாதுகாப்பு தணிக்கை குழுக்கள் மூலம் நடத்துதல்.

4. ஓப்பன்காஸ்ட் மற்றும் நிலத்தடி நிலக்கரிச் சுரங்கங்களில் பொருந்தக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்குதல் உட்பட சுரங்கச் சூழலை ஸ்ட்ரேட்டா மேலாண்மை மற்றும் கண்காணிப்புக்கான அதிநவீன பொறிமுறையை ஏற்றுக்கொள்வது

5. சுரங்கப் பாதுகாப்பு ஆய்வு: அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் போதுமான எண்ணிக்கையிலான திறமையான மற்றும் சட்டப்பூர்வ மேற்பார்வையாளர்கள் மற்றும் சுரங்க அதிகாரிகளால் 24 மணி நேரமும் கண்காணித்தல், பணியாளர் ஆய்வாளர்களின் வழக்கமான ஆய்வு.

இத்தகவலை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099174 

************ 

BR/KV


(Release ID: 2099363) Visitor Counter : 22


Read this release in: English , Urdu , Hindi