ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமமான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதிசெய்ய கிராமப்புறங்களில் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படுகிறது: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25

Posted On: 01 FEB 2025 6:34PM by PIB Chennai

2016 முதல் 2.69 கோடி வீடுகள் பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கிராம சாலை திட்டத்தின்கீழ் 8,000 கிமீ சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் மூலம் 10 கோடி குடும்பங்கள் 90.90 லட்சம் சுயஉதவிக் குழுக்களில் இணைக்கப்பட்டு ரூ.9.85 லட்சம் கோடி வங்கிக் கடன் பெற்றுள்ளன.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் 96.3% பணியாளர்கள் ஆதார் அட்டை அடிப்படையில் ஊதியம் பெறுகின்றனர்.

கிராமப்புற நீதிமன்றங்கள் 2020 டிசம்பர் முதல் 2024 அக்டோபர் வரை 2.99 லட்சம் வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்துள்ளன என்ற விவரங்களையும் பொருளாதார ஆய்வறிக்கை எடுத்துரைக்கிறது.

சமமான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதிசெய்ய கிராமப்புறங்களில் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படுவதில் அரசு முனைப்பு காட்டுவதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098705

***

SMB/KV/KR

 


(Release ID: 2098751) Visitor Counter : 42


Read this release in: English , Urdu