தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்தியாவில் டிஜிட்டல் கட்டமைப்பின் அபார வளர்ச்சி
Posted On:
01 FEB 2025 3:15PM by PIB Chennai
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 2022-23-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.74 சதவீதம் ( ரூ. 31.64 லட்சம் கோடி) பங்களித்தது, 14.67 மில்லியன் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. இந்தத் துறையில் உற்பத்தித்திறன் மற்ற துறைகளை விட ஐந்து மடங்கு அதிகமாகும். இதன் பங்கு 2029-30-ம் ஆண்டில் மொத்த மதிப்பில் 20 சதவீத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தளங்கள் ஆண்டுதோறும் 30 சதவீதம் விரிவடைந்து வருகின்றன. 2030-ம் ஆண்டில், டிஜிட்டல் பொருளாதாரம் தேசிய வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான யுபிஐ 2016-ல் தொடங்கப்பட்டது. உலகளாவிய டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளில் சுமார் 49 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. 2023-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் அனைத்து பணம் செலுத்துதலில் 40 சதவீத்துதக்கும் அதிகமானவை டிஜிட்டல் முறையில் நடைபெறுகின்றன. இதில் யுபிஐ பெரும் பங்கைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் மொத்த தொலைபேசி இணைப்புகள் மார்ச் 2014-ல் 933 மில்லியனிலிருந்து 2024 அக்டோபரில் 1188.70 மில்லியனாக உயர்ந்தன.
இணைய இணைப்புகள் மார்ச் 2014-ல் 25.15 கோடியிலிருந்து ஜூன் 2024-ல் 96.96 கோடியாக உயர்ந்து, 285.53% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
டிசம்பர் 2024 நிலவரப்படி, நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களில், 6,15,836 கிராமங்கள் 4ஜி மொபைல் இணைப்பைக் கொண்டுள்ளன.
உலகிலேயே மிக வேகமாக 5ஜி சேவை விரிவாக்கத்தை இந்தியா கொண்டுள்ளது.
2009-ல் தொடங்கப்பட்ட ஆதார் திட்டத்தில் 2023 மார்ச் வரை 136.65 கோடிக்கும் அதிகமான ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
2015-ல் தொடங்கப்பட்ட டிஜிலாக்கர் திட்டம் மக்கள், டிஜிட்டல் முறையில் ஆவணங்களை அணுகுவதன் மூலம் 'டிஜிட்டல் அதிகாரமளிப்பை' நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025 பிப்ரவரி 1 நிலவரப்படி இதில் 46.52 கோடி பயனர்கள் உள்ளனர்.
பாரத்நெட் திட்டம் நாட்டின் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் மலிவு விலையில் அதிவேக இணைய அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு லட்சியத் திட்டமாகும். 2025 ஜனவரி நிலவரப்படி, 2.14 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் பாரத்நெட் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
2022-ல் தொடங்கப்பட்ட, டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த கட்டமைப்பு (ONDC) என்பது டிஜிட்டல் வர்த்தகத்தை ஜனநாயகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். 2025 ஜனவரி நிலவரப்படி, இதற்கான தளத்தில் 7.64 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள்/சேவை வழங்குநர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098487
******************************
(Release ID: 2098487)
PLM/RR/KR
(Release ID: 2098749)
Visitor Counter : 26