அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஆராய்ச்சி நடைமுறைகள் அறிவியல்சார் தகவல் தொடர்புகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை குறித்த ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிலரங்கை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம், இந்திய ஒருங்கிணைந்த மருந்து நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
01 FEB 2025 6:53PM by PIB Chennai
ஜம்முவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழும வளாகத்தில் 2025-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி இந்திய ஒருங்கிணைந்த மருந்து நிறுவனத்துடன் இணைந்து திறன் மேம்பாட்டு பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பயிலரங்கில் ஆராய்ச்சி தொடர்பான நடைமுறைகள், அறிவியல்சார் தகவல் தொடர்புகள். அறிவுசார் சொத்துரிமை தொடர்பான தரவுகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பயிலரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையைச் சார்ந்த அனைத்து பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர். சட்டம், மேலாண்மை போன்ற பிற துறைகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனர்.
இந்தப் பயிலரங்கை மத்திய அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் – இந்திய ஒருங்கிணைந்த மருந்துகள் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சபீர் அகமத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அறிவியல்சார் தகவல் தொடர்பு, ஆராய்ச்சி நடைமுறைகள், அறிவுசார் சொத்துரிமை தொடர்பான சூழல் அமைப்புகள் குறித்து அறிந்து கொள்ள இந்தப் பயிலரங்கம் உதவிடும் என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098721
------
SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2098746)
आगंतुक पटल : 85