திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் மேம்பாடு - எதிர்காலத்திற்குத் தயாரான இந்தியாவை உருவாக்குதல்
Posted On:
01 FEB 2025 4:19PM by PIB Chennai
திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் பல திட்டங்களை மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. திறன் இந்தியா இயக்கம், பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், மக்கள் கல்வி நிலையங்கள் (ஜன் ஷிக்ஷன் சன்ஸ்தான் - JSS) போன்ற பல்வேறு திட்டங்கள் இளைஞர்களை அத்தியாவசிய தொழில்துறை தொடர்பான திறன்களில் தயார்படுத்துகிறது.
இந்த முயற்சிகள் திறன் மேம்பாடு, மறு திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. திறன் இடைவெளியைக் குறைப்பதன் மூலமும், புதுமைகளை வளர்ப்பதன் மூலமும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், திறன் இந்தியா இயக்கம் வளர்ந்த இந்தியாவிற்கு வழி வகுப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகிறது.
பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் 4-ம் கட்டம் 2022-ம் நிதியாண்டு முதல் 2026-ம் நிதியாண்டு வரை செயல்படுத்தப்படுகிறது. இலவச குறுகிய கால திறன் பயிற்சியை வழங்குவதன் மூலமும், திறன் சான்றிதழ் பெற இளைஞர்களை ஊக்குவிப்பதன் மூலமும் நாட்டில் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் 2024 ஜூன் 30 வரை 1.48 கோடி பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
மக்கள் கல்வி நிலைய திட்டம் (ஜன் சிக்ஷன் சன்ஸ்தான் - JSS) கல்வி அமைச்சகத்திலிருந்து 2018 ஜூலையில் திறன் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள எழுத்தறிவு இல்லாதவர்கள், புதிதாக எழுத்தறிவு பெற்றவர்கள், பள்ளியை விட்டு வெளியேறியவர்கள் ஆகியோருக்கு அந்த பகுதிக்கு ஏற்ற பொருத்தமான தொழில் பயிற்சி அளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், 283 மாவட்டங்களில் மக்கள் கல்வி நிலையம் எனப்படும் ஜேஎஸ்எஸ் மையங்கள் உள்ளன.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 2023 செப்டம்பர் 17 அன்று தொடங்கப்பட்டது. 18 தொழில்களைச் சேர்ந்த கைவினைஞர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் ரூ. 13,000 கோடி ஒதுக்கீட்டில் 2027-28 வரை ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது.
*****************
(Release ID: 2098551)
PLM/RR/KR
(Release ID: 2098690)
Visitor Counter : 18