உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
அறிவியல் பூர்வமான நீடிக்கவல்ல தேன் தொழில் முன்னேற்றத்திற்கான கருத்தரங்கை இந்திய தேன் கூட்டணி நடத்தியது
Posted On:
31 JAN 2025 3:53PM by PIB Chennai
அறிவியல் பூர்வமான நீடிக்கவல்ல தேன் தொழில் முன்னேற்றத்திற்கான கருத்தரங்கை தில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் இந்திய தேன் கூட்டணி நடத்தியது.
இந்தியாவின் தேன் மதிப்பு தொடரை வலுப்படுத்தும் முயற்சிகளை வலியுறுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடியின் தேன் இயக்கத்தோடு ஒத்திருப்பதாக இந்தக் கருத்தரங்கு அமைந்துள்ளது. கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்துறை தலைவர்கள் ஆகியோரை ஒன்றிணைப்பதற்கான இந்தக் கருத்தரங்கு, தர உத்தரவாதம், நீடித்த தன்மை, உலகளாவிய போட்டி ஆகியவற்றில் இந்திய தேன் தொழில்துறை குறித்த விவாதங்களின் தளமாக இருந்தது.
மத்திய உணவு பதன தொழில்கள் துறை செயலாளர் டாக்டர் சுப்ரதா குப்தா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர். தேன் உற்பத்தியில் நம்பத் தன்மையை பராமரிக்க தேனீ வளர்ப்போருக்கு அறிவியல் பூர்வமான பயிற்சி அளிப்பதன் அவசியத்தை டாக்டர் சுப்ரதா குப்தா வலியுறுத்தினார். இந்த தொழில்துறையின் நம்பத் தன்மையை அதிகரிக்க உலகளாவிய பரிசோதனை நடைமுறைகளில் முன்னேற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097985
***
SMB/AG/DL
(Release ID: 2098298)
Visitor Counter : 9