பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை 29-வது மாதாந்தர அறிக்கையை வெளியிட்டுள்ளது

Posted On: 31 JAN 2025 2:39PM by PIB Chennai

மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை 29-வது மாதாந்தர அறிக்கையை (2024 டிசம்பர்) வெளியிட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் பைசல் செய்யப்பட்ட குறைகள், பொது மக்கள் குறைகளின் வகைகள் பற்றிய விவரங்களை இந்த அறிக்கை பகுப்பாய்வு செய்துள்ளது. 2024 டிசம்பரில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மொத்தம் 67,193 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மத்தியப்படுத்தப்பட்ட பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு போர்ட்டலான சிபிகிராம்ஸ்-ல் 2024 டிசம்பர் 31 நிலவரப்படி 1,85,519 குறைகள் நிலுவையில் உள்ளன. 2024-ல் பதிவு செய்யப்பட்டதிலேயே இது மிகவும் குறைவானதாகும்.

பதிவு செய்யப்பட்ட குறைகளில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 1638 பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஒடிசாவில் 1299 குறைகள் பதிவாகியுள்ளன.

அதே சமயம் குறைகளுக்கு தீர்வு காண்பதிலும் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 22,598 குறைகள் பைசல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்  காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097930

***

SMB/AG/DL


(Release ID: 2098219) Visitor Counter : 8


Read this release in: English , Urdu