சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025 ஜனவரி 22 முதல் 26 வரை மாட்ரிட்டில் சர்வதேச சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் இந்தியா பங்கேற்றது

Posted On: 27 JAN 2025 5:56PM by PIB Chennai

ஸ்பெயின், இலத்தீன் அமெரிக்க நாடுகளின் முக்கிய சுற்றுலாச் சந்தையில், இந்தியாவை முக்கிய இடமாக நிலைநிறுத்த, ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற முன்னணி சுற்றுலா கண்காட்சியில் மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் பங்கேற்றது. சுற்றுலாத் துறையில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் இக்கண்காட்சி 2025 ஜனவரி 22 முதல் 26 வரை நடைபெற்றது.

இக்கண்காட்சியில், இந்திய அரங்கை சுற்றுலா அமைச்சகம், மாநில அரசுகளின் அதிகாரிகள், இணை கண்காட்சியாளர்கள் முன்னிலையில், ஸ்பெயினுக்கான இந்தியத் தூதர் திரு தினேஷ் கே. பட்நாயக் 2025 ஜனவரி 22 அன்று திறந்து வைத்தார். கர்நாடகா, சிக்கிம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநில அரசுகள் உட்பட 23-க்கும் மேற்பட்ட இணை கண்காட்சியாளர்களை உள்ளடக்கிய இந்திய தூதுக்குழுவினர், தங்களது தனித்துவமான சுற்றுலா சேவைகள் மற்றும் அனுபவங்களை இதில் காட்சிப்படுத்தி இருந்தனர்.

புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், ஆன்மீக இடங்கள் மற்றும் நடன வடிவங்கள் உள்ளிட்ட இந்தியாவின் வளமான கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை இந்திய அரங்கு காட்சிப்படுத்தியது. உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மத நிகழ்வுகளில் ஒன்றான மகா கும்பமேளாவின் பிரமாண்டத்தையும் அரங்கு தெளிவாக எடுத்துக்காட்டியது. 2023-ம் ஆண்டில் சுமார் 70,000 ஸ்பானிஷ் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். இது  2022-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த ஸ்பானிஷ் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை விட இரு மடங்காகும்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2096750

***

TS/IR/RJ/DL


(Release ID: 2096780) Visitor Counter : 24


Read this release in: Kannada , English , Urdu , Hindi