எரிசக்தி அமைச்சகம்
தேரி புனல் மின்சார மேம்பாட்டு நிறுவனம் 1320 மெகாவாட் குர்ஜா சூப்பர் அனல் மின் நிலையத்தில் யூனிட் #1-ன் வணிக செயல்பாட்டு தேதியை அறிவித்து சாதனையை பதிவு செய்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
27 JAN 2025 5:07PM by PIB Chennai
பொதுத்துறை நிறுவனமான தேரி புனல் மின்சார மேம்பாட்டு நிறுவனம் 1320 மெகாவாட் குர்ஜா சூப்பர் அனல் மின் நிலையத்தின் அலகு # 1-ன் வணிக செயல்பாட்டு தேதியை அறிவித்ததன் மூலம் இந்தியாவின் மின் உற்பத்தி திறனை வலுப்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லை அடைந்துள்ளது. குர்ஜா சூப்பர் நீர் மின் நிலையத்தின் 2x660 மெகாவாட் (1320 மெகாவாட்) அலகு # 1-ன் வணிக செயல்பாட்டு தேதி 2025 ஜனவரி 25 அன்று நள்ளிரவில் அறிவிக்கப்பட்டுள்ளது ஒரு பெருமையான தருணம் என்று தேரி புனல் மின்சார மேம்பாட்டு நிறுவன தலைமை நிர்வாகி இயக்குநர் திரு ஆர் கே விஷ்னோய் தெரிவித்தார். தேரி புனல் மின்சார மேம்பாட்டு இந்திய நிறுவனத்தின் முக்கிய வணிகப் பகுதி நீர் மின்சாரத்தைப் பயன்படுத்தி வந்தாலும், இந்த மைல்கல் சாதனை நிறுவனத்தின் திறன்களின் குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டைக் குறிக்கிறது. மேலும் நீர் மின் துறையில் அதன் சிறப்பையும் நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. மேலும் எரிசக்தி தற்சார்பை நோக்கிய இந்தியாவின் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறது. இப்பிரிவு வெற்றிகரமாக செயல்பாட்டிற்கு வந்ததன் மூலம், நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதிலும், நீடித்த எரிசக்தி எதிர்காலத்திற்கு உதவுவதிலும் மேலும் முக்கிய பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2096725
***
TS/IR/RJ/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2096746)
வருகையாளர் எண்ணிக்கை : 71