பாதுகாப்பு அமைச்சகம்
"சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு"- பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Posted On:
24 JAN 2025 12:14PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (2025 ஜனவரி 24) புதுதில்லியின் சௌத் பிளாக்கில் 'சஞ்சய் - போர்க்கள கண்காணிப்பு அமைப்பு (BSS)'-ஐ கொடியசைத்து தொடங்கி வைத்தார். சஞ்சய் என்பது ஒரு தானியங்கி அமைப்பாகும். இது அனைத்து தரை, வான்வழி போர்க்கள சென்சார்களிலிருந்து உள்ளீடுகளை பெற்று ஒருங்கிணைக்கிறது. அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அவற்றை செயலாக்குகிறது. பாதுகாப்பான ராணுவ தரவு கட்டமைப்பு, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் போர்க்களத்தின் பொதுவான கண்காணிப்பு படத்தை உருவாக்க அவற்றை இணைக்கிறது.
இது போர்க்கள வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, மையப்படுத்தப்பட்ட வலை பயன்பாட்டின் மூலம் எதிர்கால போர்க்கள செயல்பாடுகளுக்கு உதவும்.
பிஎஸ்எஸ் அமைப்பானது அதிநவீன சென்சார்கள், அதிநவீன பகுப்பாய்வுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பரந்து விரிந்த நில எல்லைகளைக் கண்காணித்து, ஊடுருவல்களைத் தடுத்து, அதிக துல்லியத்துடன் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்யும்.
பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, பாதுகாப்புத்துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2095712)
TS/PLM/AG/KR
(Release ID: 2095810)
Visitor Counter : 29