பாதுகாப்பு அமைச்சகம்
தற்சார்பு இந்தியா : இந்திய ராணுவத்திற்காக 47 டி -72 பாலம் அமைக்கக் கூடிய கவச வாகனங்களை கொள்முதல் செய்வதற்காக கனரக வாகன தொழிற்சாலையுடன் ரூ.1,561 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது
Posted On:
21 JAN 2025 5:32PM by PIB Chennai
இந்திய ராணுவத்திற்காக மொத்தம் ரூ.1,560.52 கோடி மதிப்பில் 47 டி-72 பாலம் அமைக்கக்கூடிய கவச வாகனங்களை கொள்முதல் செய்வதற்காக கனரக வாகன தொழிற்சாலையுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இன்று (2025 ஜனவரி 21) புதுதில்லியில் பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சகம், கனரக வாகன தொழிற்சாலை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பி.எல்.டி என்பது படைகளின் தாக்குதல், தற்காப்பு நடவடிக்கைகளின் போது பாலங்களை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான உபகரணமாகும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்படும் திட்டம் என்பதால், பாதுகாப்புத் துறையில் இந்தியாவில் தயாரியுங்கள் முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும். நாட்டில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அதிகரிப்பதிலும், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதிலும் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2094857
***
TS/IR/RJ/DL
(Release ID: 2094926)
Visitor Counter : 33