வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமூக மற்றும் பொருளாதார நீதியின் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழக்கறிஞர்களை சட்டக்கல்வி தயார்படுத்த வேண்டும்: திரு யு.யு. லலித்

प्रविष्टि तिथि: 21 JAN 2025 7:24PM by PIB Chennai

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித், சமூக மற்றும் பொருளாதார நீதியின் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழக்கறிஞர்களை சட்டக் கல்வி தயார்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மத்திய வர்த்தகத் துறையால் நிறுவப்பட்ட வர்த்தக மற்றும் முதலீட்டு சட்ட மையம் (சி.டி..எல்) ஏற்பாடு செய்திருந்த சர்வதேச வருடாந்திர வர்த்தக ஆய்வக மாநாட்டின் முழுமையான அமர்வில் அவர் முக்கிய உரையாற்றினார்.

உடன்பாட்டு நடவடிக்கை மற்றும் இலவச, கட்டாய, ஆரம்ப மற்றும் நல்ல தரமான கல்விக்கான ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமையையும் முன்னணிக்குக் கொண்டு வந்த இந்திய உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் வலுவான சமூக-பொருளாதார கட்டமைப்பை வடிவமைப்பதில் தாராளமயமாக்கல் கொள்கையுடன் பொருளாதார நீதியின் முக்கியத்துவத்தையும் அவர்  வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2094910

***

PKV/AG/DL


(रिलीज़ आईडी: 2094924) आगंतुक पटल : 76
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी