இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எல்லைப் பகுதி இளைஞர் பரிமாற்ற திட்டம் - தில்லியில் நடத்தியது நேரு யுவ கேந்திரா

Posted On: 19 JAN 2025 3:24PM by PIB Chennai

 

நேரு யுவ கேந்திரா (NYKS) 2025 ஜனவரி 15 முதல் 19 வரை புதுதில்லியின் ராஜ்காட்டில் உள்ள காந்தி ஸ்மிருதி - தர்ஷன் சமிதியில் (GSDS) எல்லைப் பகுதி இளைஞர் பரிமாற்றத் திட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைத்து. ஒற்றுமை, அமைதி ஆகியவற்றை இது வலியுறுத்தியதுடன் கலாச்சார அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு தளத்தை வழங்கியது.

ஐந்து நாள் நிகழ்ச்சி தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவித்தல், இளைஞர் தலைமையை ஊக்குவித்தல், இந்தியாவின் எல்லைப் பகுதிகளின் வளமான கலாச்சார பன்முகத்தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

இதில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீகார், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலாச்சார நடவடிக்கைகள், பயிலரங்குகள், விவாதங்கள் நடைபெற்றன.

***

PLM/KV

 

 


(Release ID: 2094307) Visitor Counter : 22


Read this release in: English , Urdu , Hindi