பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கர்மயோகி இயக்கத்தின் மக்கள் சேவை திட்டத்தின் முதல் கட்டம் - தலைமைப் பயிற்சியாளர்களுக்கான பயிற்சியை திறன் மேம்பாட்டு ஆணையம் நிறைவு செய்தது.

Posted On: 18 JAN 2025 4:23PM by PIB Chennai

 

தேசிய கர்மயோகி இயக்கத்தின் பெரிய அளவிலான மக்கள் சேவைத் திட்டத்தின் முதல் கட்டத்தில் முதன்மை பயிற்சியாளர்களுக்கான பயிற்சியை திறன் மேம்பாட்டு ஆணையம் (சிபிசி) வெற்றிகரமாக நடத்தியது. இது 2025 ஜனவரி 6 முதல் 18 வரை புதுதில்லியில் நடைபெற்றது. இந்த முன்முயற்சி குடிமைப் பணிகளில் மேலும் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.

12 நாட்கள் நடைபெற்ற பயிற்சியில், தில்லியில் உள்ள மத்திய அரசின் 80 அமைச்சகங்கள், துறைகளைச் சேர்ந்த 219 முதன்மை பயிற்சியாளர்கள் எட்டு பயிற்சித தொகுதிகளில் பங்கேற்றனர். இந்த தலைமைப் பயிற்சியாளர்கள் தங்களது சக ஊழியர்களுக்கு அந்தந்த அலுவலகங்களில் பயிற்சி அளிப்பார்கள்.

பயிற்சியின் போது, திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் திரு ஆதில் ஜைனுல்பாய், உறுப்பினர் (மனிதவளம்) திரு ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் தேசிய கர்மயோகி மக்கள் சேவைத் திட்டம் தொடர்பான தங்கள் பார்வையைப் பகிர்ந்து கொண்டனர். நிர்வாகத்தை மறுவடிவமைப்பதிலும் தன்னலமற்ற சேவையை வளர்ப்பதிலும் அதன் முக்கியத்துவத்தை அவர்கள் எடுத்துரைத்தனர்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் திரு எம் ஜெகதீஷ் குமார், திறன் மேம்பாடு - தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி போன்றவர்களும் பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினர்.

***

PLM/KV

 

 


(Release ID: 2094092) Visitor Counter : 28


Read this release in: English , Urdu , Hindi , Marathi