தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
"வேலை வாய்ப்புகளின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கம்": மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்
Posted On:
16 JAN 2025 11:08AM by PIB Chennai
மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய தொழில் கூட்டமைப்புடன் (CII) இணைந்து, "நாளைய தொழிலாளர் சக்தியை வடிவமைத்தல்: மாறும் உலகில் வளர்ச்சிக்கான உந்துதல்" என்ற கருப்பொருளில் வேலை வாய்ப்புகளின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கை நேற்று (15.01.2025) புதுதில்லியில் நடத்தியது. இந்த முக்கிய நிகழ்வு கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், நிபுணர்கள் ஆகியோரை இணைப்பதாக அமைந்தது.
இதில் உரையாற்றிய மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, திறன் மேம்பாடு நமது முயற்சிகளின் மையமாக இருக்க வேண்டும் என்றார். புதுமைகளை ஊக்குவிப்பதன் மூலமும், உற்பத்தித்திறனை மேம்படுத்துவதன் மூலமும், உலகளாவிய திறன் கட்டமைப்பு உருவாக்கப்படுவதாக அவர் கூறினார். உலகளாவிய தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் இந்தியாவின் திறனையும் அவர் எடுத்துக்காட்டினார்.
தொழில் துறைக்கும், கல்வித் துறைக்கும் இணைப்புகளை வளர்ப்பதன் மூலம், இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப ஒரு திறன் கட்டமைப்பை உருவாக்க முடியும் என்று திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2093272
----------
TS/PLM/RS/KV
(Release ID: 2093312)
Visitor Counter : 18