பாதுகாப்பு அமைச்சகம்
ஆயுதப்படைகளை நவீன போர் படைகளாக அரசு மாற்றி வருகிறது: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
प्रविष्टि तिथि:
15 JAN 2025 7:19PM by PIB Chennai
புவிசார் அரசியல் மற்றும் தொடர்ந்து மாறிவரும் போரின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆயுதப் படைகளை நவீன போர் படைகளாக மாற்றுவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். புனேயில் 2025 ஜனவரி 15 அன்று ராணுவ தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போதைய போர் முறையில் வழக்கத்திற்கு மாறான பயன்பாடு அதிகரித்து வருவதாக எடுத்துரைத்தார். ஆயுதப் படைகள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளவும் தயாராக இருக்கவும் அறிவுறுத்தினார்.
"மோதல்கள் மற்றும் போர்கள் மிகவும் வன்முறை மற்றும் கணிக்க முடியாததாக இருக்கும் என்று அவர் கூறினார். பல நாடுகளில் அரசு சார்பற்ற செயற்பாட்டாளர்களின் நடவடிக்கையும் அவர்கள் பயங்கரவாதத்தை நாடுவதும் கவலைக்குரியதாகும் என்று அவர் தெரிவித்தார். விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, எதிர்கால போர்முறைகளில் ஒரு பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார். ராணுவம் முழுமையான திறன் மேம்பாடு மற்றும் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும்" என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திகுறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2093181
***
TS/IR/RS/DL
(रिलीज़ आईडी: 2093222)
आगंतुक पटल : 78