மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது ரீசார்ஜபிள் பேட்டரி தொழில்நுட்பத்தில் புதுமைகளை விரைவுபடுத்த தொழில்துறையினர் கூட்டத்தை நடத்தியது
Posted On:
14 JAN 2025 8:31PM by PIB Chennai
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்தியாவில் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ரீசார்ஜபிள் பேட்டரி தொழில்நுட்பத்தில் புதுமைகளைப் புகுத்த தீவிரமாகப் பணியாற்றுகிறது. இதற்காக அமைச்சகம், புனேவில் உள்ள சி.எம்.இ.டி-இல் (www.coerbt.in) "ரீசார்ஜபிள் பேட்டரி தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையம்" என்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவியுள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஆதரவிற்காக அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன் தலைமையில் தொழில்துறையினர் கூட்டம் நடத்தப்பட்டது.
லித்தியம் அயனி, சோடியம் அயனி மற்றும் லித்தியம்-பாலிமர் ஆகியவற்றிற்கான உள்நாட்டு உற்பத்தி தொழில்நுட்பத்தில் மையம் அடைந்துள்ள முன்னேற்றத்தை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்முயற்சிகளில் தொழில்துறை ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் இந்த சந்திப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டன. ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்கலங்களுக்கான உள்ளூர் இயந்திரங்களை மையமாகக் கொண்டு, மின்சார வாகனம், செல்பேசி மற்றும் மின்னணு ஆகியவற்றில் உள்நாட்டு உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கும், விரிவாக்குவதற்கும் இந்த மையம் உறுதிபூண்டுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன்,“இந்த தொழில்துறையினர் சந்திப்பு, தொழில் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பை வலியுறுத்தும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக அமைந்துள்ளது எனக் கூறினார். பயன்பாட்டு ஆராய்ச்சியில் அமைச்சகத்தின் கவனம் வணிகரீதியான தொடர்பு மற்றும் தொழில் சார்ந்த தீர்வுகளுக்கான வளர்ந்து வரும் தேவைகளுடன் இசைவானதாக உள்ளது . பங்கேற்றுள்ள தொழில்துறையினரின் ஊக்கமளிக்கும் பதில் வினையானது, இங்கு விவரித்து காட்டப்பட்ட தொழில்நுட்பத்தின் திறனை எடுத்துக்காட்டுகிறது. பேட்டரி தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பிரிவாக உருவாகி வருவதால், புதுமை மற்றும் பயன்பாடுகளை மேற்கொள்வதற்கு இத்தகைய ஒத்துழைப்புகள் இன்றியமையாதவை", என்று அவர் மேலும் கூறினார்.
வாட்ஹர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (சோடியம் அயனி), ஆம்பியர் கிரீன் மெட்டீரியல் (லித்தியம் அயனி) மற்றும் பிராண்ட்வொர்க் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (லித்தியம் அயனி) ஆகியவற்றுடன் மத்திய அரசு மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2092912
*************
TS/BR/KV
(Release ID: 2093001)
Visitor Counter : 10