சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியை அஞ்சல் துறை நடத்துகிறது
Posted On:
13 JAN 2025 3:57PM by PIB Chennai
தேசிய அளவில் அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதே போல் ‘The Joy of Writing: Importance of Letters in a Digital age’ என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம். இந்த கடிதம் ஆங்கிலம், தமிழ், இந்தி மொழிகளில் இன்லேண்ட் கடிதத்தில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஏ4 தாளில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் எழுதி அனுப்ப வேண்டும்.
அக்கடிதத்தில் நான் 01.01.2024-ம் தேதியின்படி 18 வயதிற்கு கீழ்/மேல் உள்ளேன் என சுயச்சான்று அளிக்க வேண்டும்.
தேசிய அளவில் முதல் பரிசு ரூ.50,000-மும், இரண்டாம் பரிசு ரூ.25,000-மும், மூன்றாம் பரிசு ரூ.10,000-மும் வழங்கப்படும். மாநில அளவில் முதல் பரிசு ரூ.25,000-மும், இரண்டாம் பரிசு ரூ.10,000-மும், மூன்றாம் பரிசு ரூ.5,000-மும் வழங்கப்படும்.
கடிதத்தை The Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai-600002 என்ற முகவரிக்கு 31.01.2025-க்குள் அனுப்ப வேண்டும்.
***
IR/RR
(Release ID: 2092488)
Visitor Counter : 40