தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சி-டாட் - ஐஐடி மண்டி இடையே குறை மின்கடத்தி சிப் உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து
Posted On:
13 JAN 2025 2:11PM by PIB Chennai
உள்நாட்டு அதிநவீன அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் முதன்மை நிறுவனமான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையமானது (சி-டாட்) மண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஜம்முவில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. தொலைதொடர்பு அலைக்கற்றை பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான அகண்ட அலைவரிசை அலைக்கற்றைக்கான சென்சார் ஏஎஸ்ஐசி-சிப் உருவாக்கத்திற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையின் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின் கீழ் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க வழிவகை செய்கிறது. இந்தத் திட்டம், தொலைத்தொடர்பு சானதங்களின் தயாரிப்புகள், வடிவமைத்தல், வர்த்தகமயமாக்கல் போன்ற நடவடிக்கைகளுக்கும் உதவுகிறது. இத்திட்டம் குறைந்த விலையில் அகண்ட அலைவரிசைக்கான மொபைல் சேவைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2092452
------
TS/SV/KPG/RR
(Release ID: 2092475)
Visitor Counter : 28