நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஸ்இசிஎல் நிறுவனம் ஓய்வுக்குப் பிந்தைய பலன்கள் தொடர்பான பிரிவைத் தொடங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 12 JAN 2025 12:24PM by PIB Chennai

மக்களை மையமாகக் கொண்ட முன்முயற்சியில், சத்தீஸ்கரைச் சேர்ந்த கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) நிறுவனத்தின் துணை நிறுவனமான தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எஸ்இசிஎல்) நிறுவனம் ஓய்வுக்குப் பிந்தைய பலன்களுக்கான (பிஆர்பி) பிரத்தியேகப் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் முயற்சியை எட்டியுள்ளது. இந்த முயற்சி   ஓய்வு பெற்ற ஊழியர்களின் நலன்களையும் வசதிகளையும் உறுதி செய்வதற்கான எஸ்இசிஎல் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.

பிஆர்பி. பிரிவு, ஒற்றைச் சாளர அமைப்பாகச் செயல்பட்டு, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி, ஓய்வுக்குப் பிந்தைய பல்வேறு சேவைகளை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்து வழங்கும். முன்னதாக, ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ வசதிகள், பிற சலுகைகள் தொடர்பான விஷயங்களை நிவர்த்தி செய்ய ஓய்வு பெற்றவர்கள் பணியாளர், நிதி, மருத்துவம் போன்ற பல துறைகளுடன் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. இந்த தனித்தனி அணுகுமுறை பெரும்பாலும் தாமதங்கள், தவறான தகவல் தொடர்பு போன்றவற்றை ஏற்படுத்தியதுடன், அதனால் ஓய்வு பெற்றவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.

புதிதாக தொடங்கப்பட்ட பிஆர்பி செல் ஒரு மையப்படுத்தப்பட்ட தளத்தை வழங்குவதன் மூலம் இந்த சிக்கல்களைத் தீர்க்கும். இதன் மூலம் ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்திற்கு பிந்தைய நன்மைகள், சேவைகளை தடையின்றிப் பெற முடியும்.

 

இந்தப் பிரிவின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய எஸ்இசிஎல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரேம் சாகர் மிஸ்ரா, "பிஆர்பி எனப்படும் ஓய்வுக்குப் பிந்தைய நலன்கள் தொடர்பான பிரிவு தொடங்கப்பட்டுள்ளது, ஓய்வு பெற்ற ஊழியர்களின் நலனுக்கான எங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இது ஓய்வு பெற்றவர்களின்  பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கும், ஓய்வுக்குப் பிந்தைய தடையற்ற அனுபவத்தை உறுதி செய்வதற்குமான ஒரு படியாகும்." என்றார்.

***

PLM/DL


(रिलीज़ आईडी: 2092217) आगंतुक पटल : 82
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी