சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக இந்தி தின கொண்டாட்ட நிகழ்ச்சியை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் தொடங்கி வைத்தார்
Posted On:
10 JAN 2025 7:18PM by PIB Chennai
உலக இந்தி தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல், புதுதில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் உலக இந்தி தின கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய சுகாதார செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமதி படேல், உலக இந்தி தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். "இந்தி மொழியை ஒரு தகுதிவாய்ந்த சர்வதேச மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தையும் உறுதிப்பாட்டையும் இந்த நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது" என்று கூறினார். " பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு சர்வதேச மன்றங்கள் மற்றும் மேடைகளில் பிற நாடுகளின் தலைவர்களுடன் இந்தி மொழியில் உரையாடுகிறார் என்பது உலக அரங்கில் இந்தி மொழி பரவலாக்கப்படுவதை எடுத்துக்காட்டுகிறது. இது இந்தி மொழி மீதான பெருமிதத்தை வலுப்படுத்துகிறது" என்றார்.
அலுவல் பணிகளில் இந்திமொழி பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அதன் பிரபலத்தை அதிகரிக்கவும் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் எல்லைகளை கடந்து, நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பிஜி, மொரீஷியஸ் போன்ற அண்டை நாடுகளிலும் இந்திமொழியை கற்பதில் ஆர்வம் அதிகரித்து வருவதாக திருமதி பட்டேல் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091895
***
SV/AG/DL
(Release ID: 2091910)
Visitor Counter : 29