புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
2023-24 நிதியாண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்த செயல்திறனில் "சிறந்த" மதிப்பீட்டை எஸ்.இ.சி.ஐ பெறுகிறது
Posted On:
10 JAN 2025 10:01AM by PIB Chennai
சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (எஸ்.இ.சி.ஐ), 2023-24 நிதியாண்டில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அதன் செயல்திறனுக்காக "சிறந்த" மதிப்பீட்டையும், 100க்கு 96 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. இந்த சாதனை சிறப்பான செயல்பாட்டுக்கான எஸ்.இ.சி.ஐ இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பெரு நிறுவன ஆளுகையின் மிக உயர்ந்த தரங்களை நிலைநிறுத்துவதை எடுத்துக்காட்டுகிறது.
ஒரு முன்னணி மத்திய பொதுத்துறை நிறுவனமாக, எஸ்.இ.சி.ஐ, இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, டிசம்பர் 31, 2024 நிலவரப்படி ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் 73 ஜிகாவாட்டைத் தாண்டி உள்ளது. எஸ்.இ.சி.ஐ என்பது நாட்டின் முதன்மையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயல்பாட்டு நிறுவனம் ஆகும். இது பருவநிலை மாறுதல் இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கும், நிலையான வளர்ச்சியை இயக்குவதற்கும் தொடர்ந்து பணியாற்றுகிறது.
2023-24 நிதியாண்டில், நிறுவனம் அதன் வருடாந்திர வர்த்தக அளவில் 22.13% கணிசமான அதிகரிப்பைக் கண்டது, மொத்தம் 42.935 பில்லியன் யூனிட்டுகள் வர்த்தகம் செய்யப்பட்டன. எஸ்.இ.சி.ஐ-இன் மொத்த வருமானம் ரூ.13,135.80 கோடியாக பதிவு செய்யப்பட்டது, இது முந்தைய ஆண்டை விட 20.91% அதிகமான வளர்ச்சியைக் குறிக்கிறது. மேலும், நிறுவனம் 38.13% பாராட்டத்தக்க வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் ரூ.436.03 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தை அடைந்தது.
ஆகஸ்ட் 30, 2024 அன்று, எஸ்.இ.சி.ஐக்கு நிதி அமைச்சகத்தால் நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
***
(Release ID: 2091672)
TS/BR/RR/KR
(Release ID: 2091708)
Visitor Counter : 12