அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மெலடோனின் ஹார்மோனின் நானோ-உருவாக்கம் பார்கின்சன் நோய்க்கு சிகிச்சைத் தீர்வாக அமையக் கூடும்
Posted On:
02 JAN 2025 4:04PM by PIB Chennai
இருளுக்கான எதிர்வினையாக மூளை உற்பத்தி செய்யும் இருண்ட ஹார்மோன் என்று அழைக்கப்படும் மெலடோனின் ஹார்மோனின் நானோ-உருவாக்கம் மேம்பட்ட ஆக்ஸிஜனேற்ற, நரம்பு பாதுகாப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பார்கின்சன் நோய்க்கு (பிடி) சாத்தியமான சிகிச்சை தீர்வாக இருக்கலாம் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
பார்கின்சன் நோய் (பிடி) என்பது மூளையில் டோபமைன் சுரக்கும் நியூரான்கள் இறப்பதால் ஏற்படும் பொதுவான நரம்பியல் கோளாறுகளில் ஒன்றாகும்.
மெலடோனின் ஹார்மோன் பார்கின்சன் நோய்க்கான எதிர் தன்மையை கொண்டுள்ளது.
அறிவியல் - தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் - தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஎன்எஸ்டி) ஆராய்ச்சியாளர்கள் குழு மனித சீரம் அல்புமின் நானோ-சூத்திரத்தைப் பயன்படுத்தி, மெலடோனின்-மத்தியஸ்த ஆக்ஸிஜனேற்ற அழுத்த ஒழுங்குமுறைக்குப் பின்னால் உள்ள மூலக்கூறு செயல்முறையை ஆய்வு செய்தது. டாக்டர் சுரஜித் கர்மாகரும் அவரது குழுவினரும், நானோ-மெலடோனின் தொடர்ச்சியான செயல்பாடுகளை ஆய்வு செய்து அதன் மேம்பட்ட தன்மையை நிரூபித்துள்ளனர்.
நானோ-மெலடோனின் மேம்பட்ட ஆக்ஸிஜனேற்ற, நரம்பு பாதுகாப்புப் பண்புகளைக் கொண்டுள்ளதை அவர்கள் கண்டறிந்தனர். இது ஆரோக்கியமற்ற மைட்டோகாண்ட்ரியாவை அகற்ற மைட்டோபாகியை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், மைட்டோகாண்ட்ரியல் பயோஜெனீசிஸையும் மேம்படுத்தியது.
இந்த ஆய்வு மெலடோனின்-மத்தியஸ்த மைட்டோபாகி ஒழுங்குமுறைக்கு பின்னால் உள்ள மூலக்கூறு செயல்முறையை வெளிப்படுத்துகிறது. நோயியல் விளைவுகளுக்கு ஒழுங்குபடுத்தப்படாத மைட்டோபாகி முக்கியமானதாக இருக்கும் பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் இது பயன்படுத்தப்படலாம். தொடர்ச்சியான ஆய்வின் மூலம், நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்த இது ஒரு பாதுகாப்பான மருந்தாக நிறுவப்படலாம்.
-----
TS/PLM/KPG/DL
(Release ID: 2089647)
Visitor Counter : 29