புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி அகர்தலாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்
Posted On:
29 DEC 2024 7:28PM by PIB Chennai
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், புதிய - புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி 2024 டிசம்பர் 28 முதல் 29 வரை அகர்தலாவில் பயணம் மேற்கொண்டார். அகர்தலாவுக்கு அவரது பயணம் பயனுள்ள ஒன்றாகும்.
டிசம்பர் 28 அன்று இந்திய உணவுக் கழக அலுவலக கிடங்கை பார்வையிட்டார், அங்கு தற்போதைய நிலைமை, குறிப்பாக உணவு தானிய சேமிப்பு, விநியோகம் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், திரிபுராவில் மத்திய அரசின் முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, முதலமைச்சர் திரு டாக்டர் மாணிக் சாஹா, இதர அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பிரதமரின் சூர்ய மின் சக்தி திட்டம் போன்ற திட்டங்களின் அமலாக்கம் குறித்தும் மத்திய அமைச்சர் திரு ஜோஷி விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
இந்த கூட்டங்களில், சவால்களை எதிர்கொள்வது, மாநிலத்தில் முக்கியமான திட்டங்களை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்கான தீர்வுகளை அடையாளம் காண்பது குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மாநில அரசுடன் எப்போதும் மேம்பட்ட ஒத்துழைப்பு குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, கூட்டு முயற்சிகள் மூலம், திரிபுரா மக்களுக்கு சிறந்த வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் என்று கூறினார்.
***
PLM/KV
(Release ID: 2088760)
Visitor Counter : 23