பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரின் ராம்பனில் பொது மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்- மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார்
Posted On:
29 DEC 2024 6:47PM by PIB Chennai
மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ராம்பனில் நடந்த பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார்.
மக்கள் குறைகளை டாக்டர் ஜிதேந்திர சிங் பொறுமையாகக் கேட்டு, ஒவ்வொரு விஷயத்திற்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தல்களை வழங்கினார்.
ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்க கடந்த பத்தாண்டுகளில் அரசு பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
இந்த காலகட்டத்தில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பயனுள்ளவையாக இருந்தன என்று அமைச்சர் கூறினார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், பொது பிரச்சினைகளில் விரைவான தீர்வுக்கு முன்னுரிமை அளித்து அவற்றைத் தீர்க்குமாறு நிர்வாகத்தை வலியுறுத்தினார்.
***
PLM/KV
(Release ID: 2088757)
Visitor Counter : 23