அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அணுசக்தி துறையின் 2024 ஆண்டறிக்கை

Posted On: 24 DEC 2024 11:26AM by PIB Chennai

அணுமின் திட்டத்தில், அணுக்கனிம ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான இயக்குநரகம் (ஏ.எம்.டி), இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன், அணு எரிபொருள் வளாகம் , கனநீர் வாரியம், இந்திய மின்னணுக் கழகம், இந்திய அணுமின் கழகம், பாரதிய நாபிகிய வித்யுத் நிகாம் லிமிடெட் (பாவினி), பாபா அணு ஆராய்ச்சி மையம் (பி.ஏ.ஆர்.சி) மற்றும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (ஐ.ஜி.சி.ஏ.ஆர்) ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.


கடந்த அக்டோபரில் இருந்து, ஏ.எம்.டியின் தொடர்ச்சியான முயற்சிகள் ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 15,598 டன் யுரேனியம் ஆக்சைடு வளத்தை பெருக்கியுள்ளது. நாட்டின் மொத்த யுரேனியம் ஆக்சைடு வளம் 4,25,570 டன் ட்ரையுரேனியம் ஆக்டாக்சைடாக மேம்படுத்தப்பட்டுள்ளது.


இந்தியாவின் மிகப் பழமையான யுரேனியச் சுரங்கமான ஜடுகுடா சுரங்கத்தில் தற்போதுள்ள சுரங்க குத்தகைப் பகுதியிலும் அதைச் சுற்றியும் புதிய படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறைந்து வரும் சுரங்கத்தின் ஆயுளை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரிக்கும்.


குஜராத்தின் கக்ராபரில் உள்ள 700 மெகாவாட் மின்சாரத் திறன் கொண்ட அழுத்தப்பட்ட கன நீர் உலையின்  முதல் இரண்டு அலகுகள் 2023-24 நிதியாண்டில் வணிக ரீதியாக செயல்படத் தொடங்கியுள்ளன. அனுமதிக்கப்பட்ட 16 அணு உலைகளின் வரிசையில் 3 வது உள்நாட்டு அணு உலையான ராவத்பாட்டா அணுமின் திட்டம் அலகு -7, ஆரம்ப எரிபொருள் நிரப்பலை முடித்துள்ளது.


நாட்டின் முதல் முன்மாதிரி வேகப் பெருக்கி உலை (500 மின்சாரத் திறன்), பல மைல்கற்களை அடைந்தது, அதாவது பிரதானக் கலத்தில் முதன்மை சோடியம் நிரப்புதல், நிரப்பப்பட்ட சோடியத்தை சுத்திகரித்தல் மற்றும் நான்கு சோடியம் பம்புகளை (2 முதன்மை சோடியம் பம்புகள் & 2 இரண்டாம் நிலை சோடியம் பம்புகள்) இயக்குதல் உள்ளிட்டவை இதில் அடங்கும். பிரதமரின் முன்னிலையில் மார்ச் 4,  2024 அன்று முதல் அணு உலை கட்டுப்பாட்டு கம்பி ஏற்றும் பணி தொடங்கப்பட்டது.


எஃப்.பி.டி.ஆர்-இல் சப்-அசெம்பிளி லெவல் கதிர்வீச்சிற்காக 1.0 மீட்டர் நீளமுள்ள சோடியம்-பிணைக்கப்பட்ட உலோக எரிபொருள் ஊசிகளை உருவாக்கும் 'சப்-அசெம்பிளி லெவல் மெட்டல் ஃப்யூல் ஃபேப்ரிகேஷன் ஃபேசிலிட்டி' 2024 மே 28 அன்று திறக்கப்பட்டது. ஆல்பா, பீட்டா மற்றும் காமா கதிர்வீச்சுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மின்னணு ஆகியவற்றைக் கண்டறிவதற்கான பிரத்யேக டிடெக்டர்களைக் கொண்ட  இணையவழி ஐசோடோப் கண்காணிப்பு அமைப்புமுறை கல்பாக்கம் தளத்தில் ஐ.ஜி.சி.ஏ.ஆர்-ஆல் நிறுவப்பட்டுள்ளது. அயோடின், சீசியம் போன்ற கதிரியக்க ஏரோசோல்களையும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் செனான் மற்றும் கிரிப்டான் போன்ற உன்னத வாயுக்களையும் அணுசக்தித் துறையில் உள்ள இது போன்ற முதல் அமைப்புமுறை,  இணைய வழியில் கண்டறிய உதவுகிறது.


இந்திய அணுமின் கழகம் மற்றும் தேசிய அனல் மின் கழகம் ஆகியவை நாட்டில் அணுசக்தி வசதிகளை மேம்படுத்துவதற்கான துணை கூட்டு முயற்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அஷ்வினி என பெயரிடப்பட்ட கூட்டு ஒப்பந்தம்,அணுசக்தி சட்டம் 1962 (2015 இல் திருத்தப்பட்டது) இன் தற்போதைய சட்ட கட்டமைப்பிற்குள் செயல்படும்.


 சுகாதாரத்துறையில், மலிவு விலையில் புற்றுநோய் பராமரிப்பு மற்றும் உள்நாட்டு மேம்பாடு, வணிகமயமாக்கல் மற்றும் கதிரியக்க மருந்துகளை வழங்குவதற்கு  அணுசக்தி துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. இந்த பணியில், டாடா நினைவு மையம் , கதிரியக்க மற்றும் ஐசோடோப்பு தொழில்நுட்ப வாரியம், மாறுபடும் ஆற்றல் சைக்ளோட்ரான் மையம், கனநீர் வாரியம், பி.ஏ.ஆர்.சி மற்றும் ஐ.ஜி.சி.ஏ.ஆர் ஆகியவை முக்கிய பங்கு வகித்தன.


சி.டி ஸ்கேன், பி.இ.டி ஸ்கேன், அதிநவீன அறுவை சிகிச்சை மையமான 'சுஷ்ருதா II' மற்றும் முழுமையாகப் பொருத்தப்பட்ட நியூக்ளியர் இமேஜிங் துறை உள்ளிட்ட பல புதிய வசதிகள் பஞ்சாபில் உள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் திறக்கப்பட்டுள்ளன.


துறையின் பவள விழா ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, லடாக்கின் ஹன்லேயில் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முக்கிய வளிமண்டல செரென்கோவ் பரிசோதனை ஆய்வகம் அக்டோபர் 4, 2024 அன்று திறக்கப்பட்டது. முக்கிய வளிமண்டல செரென்கோவ் பரிசோதனை ஆய்வகம் என்பது ஆசியாவின் மிகப்பெரிய இமேஜிங் செரென்கோவ் தொலைநோக்கி ஆகும், இது உலகின் மிக உயரத்தில் சுமார் 4300 மீட்டர்  தொலைவில் அமைந்துள்ளது.


இந்தியாவின் ஊட்டியில் ஜி.ஆர்.ஏ.பி.இ.எஸ் -3 சோதனையானது, காஸ்மிக்-ரே புரோட்டான் ஸ்பெக்ட்ரமில் சுமார் 166 டெரா-எலக்ட்ரான்-வோல்ட்டில் கின்க் இருப்பதைக் கண்டறிந்தது. புதிய அம்சம், காஸ்மிக் கதிர்களின் தோற்றம் மற்றும் பரவல் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தும், இது ஒரு நூற்றாண்டு பழமையான தீர்க்கப்படாத பிரச்சனையாகும்.


மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2087501 

 

*****

RB/DL


(Release ID: 2087904) Visitor Counter : 93