சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
மக்கள் நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகள்
Posted On:
19 DEC 2024 6:35PM by PIB Chennai
நீதிமன்றங்கள் செயல்படாத நாளில் மக்கள் நீதிமன்றங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நடப்பாண்டில் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மார்ச் 9, மே 11, செப்டம்பர் 14 மற்றும் டிசம்பர் 14 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டன. இதேபோல், 2025-ம் ஆண்டில் மார்ச் 8, மே 10, செப்டம்பர் 13 மற்றும் டிசம்பர் 13 ஆகிய நாட்களில் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினர்களுடனும் ஒருங்கிணைந்து, தங்கள் மாநிலத்தில் மக்கள் நீதிமன்றங்களை அமைப்பதில், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் ஒரு குறிப்பிட்ட பங்கைக் கொண்டுள்ளன.
மத்திய அரசால் தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு வழங்கப்படும் மானியங்கள், மக்கள் நீதிமன்றங்களை ஏற்பாடு செய்வது உட்பட பல்வேறு சட்ட சேவைகள் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை மேற்கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இதைப் பயன்படுத்த முடியாது. உட்கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை தொடர்பான விவகாரத்தில் தலையிடுமாறு அனைத்து மாநில சட்டசேவை ஆணைக் குழுக்களுக்கும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2086157
*****
IR/KPG/DL
(Release ID: 2086226)
Visitor Counter : 10