ஜல்சக்தி அமைச்சகம்
மை கவ் 'இல்லம்தோறும் குழாய் மூலம் குடிநீர்’ விநாடி வினா போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கலை ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கியது
Posted On:
19 DEC 2024 5:58PM by PIB Chennai
ஜல் ஜீவன் அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் கீழ் உள்ள தேசிய ஜல் ஜீவன் இயக்கம், மை கவ் இணையதளத்தில் நடத்தப்பட்ட 'இல்லம் தோறும் குழாய் வழிக் குடிநீர் விநாடி வினா: தண்ணீர் குறித்த அறிவுப் போட்டி' வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது. நாட்டின் அனைத்து கிராமப்புற வீட்டிற்கும் தூய்மையான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மக்களை ஈடுபடுத்துவதற்கான ஜல் ஜீவன் இயக்கத்தின் முயற்சிகளில் ஒரு பகுதியாக இது உள்ளது.
மைகவ் போட்டிகள் நாடு முழுவதும் உள்ள குடிமக்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றன. இது ஜல் ஜீவன் இயக்கத்தின் மீதான அவர்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த விநாடி வினா போட்டியில், 50,000-க்கும் அதிகமான மக்கள் பங்கேற்று நீர் பாதுகாப்பு, சுகாதாரம் குறித்த புரிதலை மேம்படுத்திக் கொண்டுள்ளனர்.
வெற்றியாளர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையைத் தொடர்ந்து, 2024 ஜூன் 7 அன்று 1,500 வெற்றியாளர்களின் பட்டியல் மைகவ் தளத்தில் வெளியிடப்பட்டது, அதை blog.mygov.in/winner-announcement-for-har-ghar-jal-quiz-jal-ka-gyan-ab-hua-aasan/ ல் காணலாம். இதுவரை விவரங்களை சமர்ப்பித்த விநாடி வினா வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2,000/- பரிசுத் தொகையை இத்துறை தற்போது வழங்கத் தொடங்கியுள்ளது. சரியான நேரத்தில் பரிசு விநியோகத்தை எளிதாக்க, மீதமுள்ள அனைத்து வெற்றியாளர்களும் தங்கள் வங்கி விவரங்களை 2024 டிசம்பர் 31–க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்: https://ejalshakti.gov.in/Quizc.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2086131
----
TS/IR/KPG/DL
(Release ID: 2086218)
Visitor Counter : 40