சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி:- தில்லியில் தூசி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல்

இடுகை இடப்பட்ட நாள்: 19 DEC 2024 5:52PM by PIB Chennai

கட்டுமானம், இடிப்பு நடவடிக்கைகளிலிருந்து வரும் தூசி மாசுபாடு தில்லி தேசிய தலைநகரப்பகுதியில் காற்று மாசுபாட்டிற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சில விதிமுறைகள் அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் சில:

  • சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படும் திட்டங்களுக்கான கட்டுமானம் இடிப்பு நடவடிக்கைகளுக்கான தூசி தணிப்பு நடவடிக்கைகளை கட்டாயமாக செயல்படுத்துதல் வேண்டும்.
  • கட்டுமானப் பொருட்கள் கழிவுகளை கையாள்வதில் தூசி தணிப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள் (நவம்பர், 2017)' மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளமான https://cpcb.nic.in/technical-guidelines-5/ -ல் வெளியிடப்பட்டுள்ளது.
  • தேசிய தலைநகர் பகுதியில் தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணித்து திறம்பட செயல்படுத்துவதற்காக, "தூசி கட்டுப்பாடு -மேலாண்மை பிரிவு" அமைக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

  • மத்திய காற்றுத்தர மேலாண்மை  ஆணையம், 40 பறக்கும் படைகள் / ஆய்வுக் குழுக்களை, சோதனைகளை மேற்கொள்வதற்கும், விதி மீறல்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும்  அமைத்துள்ளது.
  • மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PLM/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2086213) வருகையாளர் எண்ணிக்கை : 74
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी