ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பயனாளிகள், மாநில, மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோருடன் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் கலந்துரையாடினார்

प्रविष्टि तिथि: 18 DEC 2024 7:13PM by PIB Chennai

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்து மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இன்று சிறப்பு அமர்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணியாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள், சுமார் 20 மாநிலங்களின் ஆணையர்கள் மற்றும் இதர அதிகாரிகள், மாவட்டங்கள், வட்டாரங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் திரு. சவுகான் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தினார். இணையமைச்சர்கள் திரு கமலேஷ் பாஸ்வான், டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி, ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங், கூடுதல் செயலாளர் திரு டி.கே.அனில் குமார், இணைச் செயலாளர் திருமதி ரோகிணி ஆர்.பாஜிபாகரே மற்றும் அமைச்சகத்தின் பிற உயர் அதிகாரிகள், பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிற தொடர்புடையவர்கள் இந்த விவாத அமர்வில் பங்கேற்றனர்.

 

மத்திய அரசின் லட்சியத் திட்டம் குறித்து பிரதிநிதிகள் முக்கிய ஆலோசனைகளை வழங்கினர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நமது சகோதர, சகோதரிகளுக்கு மிக முக்கியமான திட்டம் என்று திரு சிவராஜ் சிங் சவுகான் கூறினார். வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்த மக்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வெறும் திட்டம் மட்டுமல்ல, கிராமப்புற இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நிலைத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலுக்கான முக்கிய வழிமுறை என்று மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் விவாத அமர்வில் கூறினார்.

 

*****


IR/KPG/DL


(रिलीज़ आईडी: 2085861) आगंतुक पटल : 83
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Odia