உள்துறை அமைச்சகம்
தடய அறிவியல் ஆய்வகங்கள்
Posted On:
18 DEC 2024 5:13PM by PIB Chennai
தடய அறிவியல் சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் தற்போது நாட்டில் 7 மத்திய தடய அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன. இந்த மத்திய ஆய்வகங்கள் போபால் (மத்தியப் பிரதேசம்), சண்டிகர், காம்ரூப் (அசாம்), ஹைதராபாத் (தெலுங்கானா), புனே (மகாராஷ்டிரா ), தில்லி, கொல்கத்தா (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. மேலும், அமைச்சகத்திற்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, நாட்டில் 32 மாநில தடய அறிவியல் ஆய்வகங்களும், 97 மண்டல தடய அறிவியல் ஆய்வகங்களும் செயல்படுகின்றன.
நாட்டில் தடய அறிவியலுக்கான சூழல் அமைப்பு உட்பட புலனாய்வு மற்றும் வழக்குத் தொடர்வதற்கான திறன்களை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. நாட்டில் தடய அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் தொடர்புடைய வசதிகளை வலுப்படுத்தும் செயல்முறை, இடைவெளி, பகுப்பாய்வு மற்றும் தேவை மதிப்பீட்டை சார்ந்துள்ள ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். 'காவல்துறை' மற்றும் 'பொது ஒழுங்கு' ஆகியவை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில துறைகளாகும். சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், புலனாய்வு உள்ளிட்ட குடிமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்தல், குற்றம் மற்றும் குற்றவாளிகளுக்கு வழக்குத் தொடர்தல் மற்றும் தொடர்புடைய தடய அறிவியல் வசதிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் பொறுப்புகளாகும்.
நாட்டில் தடய அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் தடயவியல் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
போபால், குவஹாத்தி, புனே ஆகிய இடங்களில் மூன்று புதிய மத்திய தடய அறிவியல் ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் உள்ள மத்திய தடய அறிவியல் மையம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மோசடி / சைபர் தடய அறிவியல் தொடர்பான முக்கியமான வழக்குகளை விசாரிக்க ஹைதராபாத்தில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் தேசிய இணையவழி தடயவியல் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. மேலும், சண்டிகர், தில்லி, கொல்கத்தா, காம்ரூப், போபால் மற்றும் புனே ஆகிய மத்திய ஆய்வகங்களில் ரூ.126.84 கோடி மொத்த ஒதுக்கீட்டில் கூடுதலாக 6 தேசிய இணையவழி தடயவியல் ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் உள்ள 117 தடய அறிவியல் ஆய்வகங்களை (மத்திய மற்றும் மாநில) இணைக்கும் மின்னணு தடய அறிவியல் தகவல் தொழில்நுட்ப தளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
மத்திய அரசு 19.06.2024 அன்று "தேசிய தடய அறிவியல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு" ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, 2024-2025 நிதியாண்டு முதல் 2028-2029 வரை, கூடுதலாக 9 தேசிய தடய அறிவியல் வளாகங்கள் ரூ.1309.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்த 9 வளாகங்களை அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085688
***
TS/PKV/RJ/DL
(Release ID: 2085831)
Visitor Counter : 18