பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்கள், குழந்தைகள் மீதான இணையவழிக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள்

Posted On: 18 DEC 2024 3:54PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின்படி 'காவல்துறை' மற்றும் 'பொது ஒழுங்கு' ஆகியவை மாநில அம்சங்கள். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்கள் சட்ட அமலாக்க முகமைகள் மூலம் இணையவழிக் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, கண்டுபிடிப்பது, புலனாய்வு செய்வது மற்றும் வழக்குத் தொடர்வது ஆகியவற்றின் முதன்மையான பொறுப்பாகும். இணையவழிப் பாதுகாப்புக்கான நடைமுறையை வலுப்படுத்தவும், இணையவழிக் குற்றங்களை விரிவான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் கையாளவும், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான இணையவழிக் குற்றங்களையும் ஒருங்கிணைந்து கையாள்வதற்காக 'இந்திய இணையவழிக் குற்றத்திற்கு எதிராக ஒருங்கிணைப்பு மையத்தை' உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழிக்  குற்றங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து வகையான கணினிசார் குற்றங்கள் தொடர்பான சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க 'தேசிய இணையவழிக் குற்ற தகவல் இணையதளம்' (https://cybercrime.gov.in) தொடங்கப்பட்டுள்ளது. நிதி மோசடிகளை உடனடியாகப் புகாரளிப்பதற்கும், நிதி மோசடி செய்வதைத் தடுப்பதற்கும் I4C-ன் கீழ் 'குடிமக்கள் நிதி இணையவழி மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு' 2021-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதுவரை, 9.94 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்களில் ரூ.3431 கோடிக்கும் அதிகமான நிதி மீட்கப்பட்டுள்ளது. இணையவழிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக கட்டணமில்லா தேசிய இணையவழிக் குற்றத்தடுப்பு உதவி எண் (1930) 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085609

*****

TS/IR/KPG/DL


(Release ID: 2085829) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Hindi , Bengali-TR