உள்துறை அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் எதிரி சொத்துக்களின் நிலை
Posted On:
18 DEC 2024 5:14PM by PIB Chennai
மேற்கு வங்கத்தில் பாகிஸ்தான், சீன நாட்டினர் விட்டுச் சென்ற எதிரி சொத்துக்கள் பல மாவட்டங்களில் உள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் எதிரி சொத்துக்கள் எதுவும் விற்கப்படவில்லை. எனினும், மேற்கு வங்கத்தில் உள்ள எதிரி சொத்துக்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.69.72 லட்சம் குத்தகை வாடகை வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் அடிப்படையில், மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள ஐநூற்று முப்பத்தாறு (536) எதிரி சொத்துக்களில் ஆக்கிரமிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் எதிரி சொத்துக்களின் பதவி வழி துணை பாதுகாவலராக செயல்படுகிறார்கள். அவர்கள் பாதுகாப்பு, பராமரிப்புக்கு பொறுப்பானவர்கள். எதிரி சொத்துக்களை அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக எதிரி சொத்து விதிகள் 2015-ன் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை, அத்தகைய அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்களுக்கு எதிராக நாற்பத்தொன்பது வெளியேற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2085805)
Visitor Counter : 15