விண்வெளித்துறை
நாடாளுமன்ற கேள்வி: விண்வெளித் துறையில் தனியார் பங்கேற்பை ஊக்குவித்தல்
Posted On:
18 DEC 2024 3:15PM by PIB Chennai
இந்தியாவில் விண்வெளித் துறையில் தனியார் செயல்பாடுகளையும், அத்துறையில் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியையும் மேலும் ஊக்குவிக்க அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது:
- விண்வெளித் துறை தாராளமயமாக்கப்பட்டு, தனியார் துறை முழுமையான விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
- விண்வெளித் துறையில் அரசு சாரா நிறுவனங்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கும், அங்கீகரிப்பதற்கும், மேற்பார்வையிடுவதற்கும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு, அங்கீகார மையம் (IN-SPACe) உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்திய விண்வெளிக் கொள்கை அரசால் வகுக்கப்பட்டுள்ளது.
- தனியார் துறையை ஊக்குவிப்பதற்கு தொடக்க நிதி திட்டம், நிதி ஆதரவு கொள்கை, வழிகாட்டுதல் ஆதரவு, தொழில்நுட்ப மையம், வடிவமைப்பு ஆய்வகம், விண்வெளித் துறையில் திறன் மேம்பாடு, இஸ்ரோ வசதிகளுக்கான பயன்பாட்டு ஆதரவு, தொழில்நுட்ப பரிமாற்றம், இன்-ஸ்பேஸ் டிஜிட்டல் தளத்தை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- 2014-ல் வெறும் 1 ஆக இருந்த விண்வெளி புத்தொழில் நிறுவன எண்ணிக்கை தற்போது 266 ஆக உயர்ந்துள்ளது.
- இந்திய விண்வெளி பொருளாதாரத்திற்கான பத்தாண்டு பார்வை, ஒட்டுமொத்த விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கும்.
- இந்தியாவின் விண்வெளித் துறைக்கு ஆதரவளிப்பதற்காக ரூ.1,000 கோடி துணிகர மூலதன நிதியத்தை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2085776)
Visitor Counter : 17