கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவுத் துறையில் செயல் திறன் விருதுகள்

Posted On: 17 DEC 2024 4:34PM by PIB Chennai

தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு அளித்துள்ள தகவலின்படி, தொழில்நுட்ப செயல்திறனை மேம்படுத்தவும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தும் வகையிலும் தொழில்நுட்ப செயல்திறன் விருதுகள் அதன் வெள்ளி விழா ஆண்டில் (1985)   அறிமுகம் செய்யப்பட்டது .

செயல்திறன் விருதுகள் காரணமாக துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பின்னூட்டங்கள் குறித்து தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பமண்டல மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் ஆகியவற்றில்  சராசரி கரும்பு மகசூல் 128-144 டன்/எக்டர் மற்றும் சராசரி சர்க்கரை மீட்பு சதவீதம் 12.64 - 13.20% ஆகவும்  துணை வெப்பமண்டல மாநிலங்களான உத்திரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் போன்றவற்றில்  சராசரி கரும்பு மகசூல் 70-90 டன்/எக்டர் மற்றும் சராசரி சர்க்கரை மீட்பு சதவீதம் 10.89-12.18% ஆகவும் பதிவாகியுள்ளது.

விருது பெறும் ஆலைகள், முறையாக செயல்படுத்தப்படும் கரும்பு அபிவிருத்தித் திட்டம், தாவர பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு மற்றும் விரிவாக்கல் திட்டங்களுக்கு போதியளவு தொகை செலவிட்டுள்ளன. அவை 100% திறன் பயன்பாட்டை அடைந்தவை ஆகும். 2020-21, 2021-2022 & 2022-23 அரவைப் பருவத்தில் குறைந்த இழப்புகளுடன் அதிக ஆலைகள் சர்க்கரை உற்பத்தி செய்தன. ஒட்டுமொத்தமாக, 88-108 ஆலைகளில், (அரவைப் பருவம்- 2020-21, 2021-2022 & 2022-23), 21 விருது பெற்ற ஆலைகள், மூன்று சர்க்கரைப் பருவங்களில் கரும்பு மேம்பாடு, தொழில்நுட்ப செயல்திறன், நிதி மேலாண்மை ஆகிய நிலையான அளவுரு பிரிவுகளில் அதிகபட்ச நிலைகளைப் பெற்றுள்ளன.

அகில இந்திய அளவில், ஒரு ஹெக்டேருக்கு 70 முதல் 80 டன் வரை கரும்பு உற்பத்தித்திறன் பதிவாகியுள்ளது. இந்த உற்பத்தித்திறன் அளவானது இத்துறையில் விவசாய நடைமுறைகள் மற்றும் பயிர் நிர்வாகம்   என்பவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. இதே காலகட்டத்தில், அதாவது 2010 முதல் 2020 வரை 10.17 % முதல் 11.01 % வரை சர்க்கரை மீட்புத்திறன் பதிவாகியுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் சர்க்கரைத் தொழிலில் மேலும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான திறனை எடுத்துக்காட்டுகின்றன, இது சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும்  நிறுவனங்களுக்கும்  பயனளிக்கிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085266  

***

TS/SMB/AG/DL


(Release ID: 2085425) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi