எஃகுத்துறை அமைச்சகம்
தடையில்லா சான்றிதழ்களில் தாமதம்
Posted On:
17 DEC 2024 3:59PM by PIB Chennai
தரமான எஃகு மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் அல்லது வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) எஃகு அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வகையில், 151 பிஐஎஸ் தரநிலைகள் அறிவிக்கப்பட்டு, எஃகு அமைச்சகத்தால் தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இது மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா அரசின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்பவும், இறுதி பயனர்களுக்கும், பொதுமக்களுக்கும் தரமான எஃகு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்யும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அல்லது நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் எஃகு, பிஐஎஸ் தரத்திற்கு இணங்குவதையும், தரமற்ற எஃகு உற்பத்தி செய்யப்படுவதில்லை அல்லது இறக்குமதி செய்யப்படுவதில்லை என்பதையும் இது உறுதி செய்கிறது.
வெளியில் இருந்து எந்த எஃகு இறக்குமதி செய்தாலும் பிஐஎஸ் உரிமம் மூலம் தான் செய்ய முடியும். இருப்பினும், பிஐஎஸ் தரநிலைகளின் கீழ் இன்னும் வராத சில எஃகு தரங்களை எஃகு அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழுடன் (என்ஓசி) இறக்குமதி செய்யலாம். இதற்கென அமைக்கப்பட்ட குழு இந்த விண்ணப்பங்களை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி என்.ஓ.சி விண்ணப்பங்கள் மீது குழு முடிவுகளை எடுக்கிறது. என்.ஓ.சி விண்ணப்ப செயல்முறையை மேலும் சீராக்க ஏற்கனவே ஒரு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
எஃகு என்பது ஒரு ஒழுங்குபடுத்தப்படாத துறையாகும், அங்கு எஃகின் விலைகள் சந்தை இயக்கவியலால் தீர்மானிக்கப்படுகின்றன. அதன் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து ஏற்ற இறக்கமாக இருக்கும். நாட்டில் எஃகுத் துறையின் வளர்ச்சிக்கு உகந்த கொள்கைச் சூழலை உருவாக்குவதன் மூலம் அரசு வசதி செய்து தரும் அமைப்பாக செயல்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. பூபதிராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
PKV/AG/DL
(Release ID: 2085424)
Visitor Counter : 13