மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தரமான கல்வியை வழங்கும் வகையில் உயர்கல்வி நிறுவனம் மேம்படுத்தப்பட்டு வருகிறது- திரு தர்மேந்திர பிரதான்
Posted On:
17 DEC 2024 2:00PM by PIB Chennai
நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எளிதான அணுகுமுறை, சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
1.கல்வி நிலையங்கள் அதிகரிப்பு உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 2014-15-ல் 51534 ஆக இருந்தது 2022-23-ல் 58643-ஆக அதிகரித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை 760-ல் இருந்து 1213-ஆக அதிகரித்துள்ளது.
கல்லூரிகள் எண்ணிக்கை 38498-ல் இருந்து 46624 ஆக அதிகரித்துள்ளது.
அதாவது உயர்கல்வி நிறுவனங்கள்13.8%, பல்கலைக்கழகங்கள் 59.6% மற்றும் கல்லூரிகள் 21.1% அதிகரித்து உள்ளன.
2.மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
2014-15-ம் ஆண்டில் 3.42 கோடியாக இருந்த மொத்த சேர்க்கை 2022-23-ம் ஆண்டில் 4.46 கோடியாக 30.5% அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085152
---
TS/SV/KPG/KR
(Release ID: 2085310)
Visitor Counter : 32