சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுலாப் பயணிகளுக்கான 24x7 கட்டணமில்லா உதவி மையம்

प्रविष्टि तिथि: 12 DEC 2024 5:41PM by PIB Chennai

சுற்றுலாப் பயணிகளுக்கான 24x7 கட்டணமில்லா உதவி மையத்தை சுற்றுலா அமைச்சகம் 08.02.2016 அன்று தொடங்கியது. இதில் ஆங்கிலம், இந்தி தவிர பத்து (10) சர்வதேச மொழிகளில் சேசை வழங்கப்படுகிறது. இச்சேவை 1800-11-1363 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஆண்டின் 365 நாட்களும் அனைத்து நேரங்களிலும் கிடைக்கும்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியாவில் பயணம் மற்றும் சுற்றுலா தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான ஆதரவு சேவையை வழங்குவதும், இந்தியாவில் பயணம் செய்யும் போது தேவைப்படும் நேரங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அழைப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதும், தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எச்சரிப்பதும் இந்த பன்மொழி உதவி மையத்தின் நோக்கமாகும்.

உதவி மையம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை வந்த அழைப்புகளின் எண்ணிக்கை சுமார் 7.9 லட்சமாகும்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083793

***

IR/RJ/DL


(रिलीज़ आईडी: 2083923) आगंतुक पटल : 52
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Urdu