அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நாடாளுமன்ற கேள்வி: பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான ஆதரவு: 82 பல்கலைக்கழகங்களுக்கு ₹1227 கோடி
Posted On:
12 DEC 2024 4:32PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்துவதற்காக ஒரு பிரத்யேக திட்டத்தை செயல்படுத்துகிறது. இது பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் சிறப்பை மேம்படுத்துதல் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மொத்தம் ₹1227 கோடி அளவிற்கு நிதி அளித்து 82 பல்கலைக்கழகங்களுக்கு ஆதரவளித்துள்ளது. கூடுதலாக, 2024-ம் ஆண்டில் மேலும் ஒன்பது பல்கலைக்கழகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆதரவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மேலும், "பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியத்தின்" கீழ், பல்வேறு பல்கலைக்கழகங்களின் துறைகள் அறிவியல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆதரவைப் பெறுகின்றன. ஆராய்ச்சி வசதிகளைப் பெறுவதற்காக அதிநவீன பகுப்பாய்வுக் கருவி வசதிகள் மையங்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083731
***
TS/IR/RJ/KR/DL
(Release ID: 2083860)
Visitor Counter : 18