பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மிஷன் கர்மயோகியின் கீழ் ஐகோட் கர்மயோகி தளத்தில் பீகார் அரசு 2.4 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை இணைத்துள்ளது
प्रविष्टि तिथि:
12 DEC 2024 12:27PM by PIB Chennai
பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் பிரதமரின் மிஷன் கர்மயோகி முன்முயற்சியின் கீழ், திறன் மேம்பாட்டு ஆணையம், கர்மயோகி பாரத் மற்றும் பீகார் பொது நிர்வாகம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம் இடையே அக்டோபர் 7, 2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் பீகாரில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் அனைத்து பொது ஊழியர்களும் அலுவல் விதிகள் அடிப்படையில் இல்லாமல் பங்கேற்புப் பாத்திரம் அடிப்படையில் செயல்படுவர்களாக மாற முடியும்.
அரசு ஊழியர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட முதன்மை டிஜிட்டல் முயற்சியான ஐகோட் கர்மயோகி தளத்தின் மூலம் இது அடையப்படும். இது ஒரு வலுவான மின்-கற்றல் மையமாகவும் செயல்படும்.
ஐகோட் கர்மயோகி இயங்குதளத்தில் கிடைக்கும் பல்வேறு ஆன்லைன் படிப்புகளில் பீகார் அரசு அதிகாரிகள் தீவிரமாக பங்கேற்கின்றனர். இதுவரை, 20 எம்டிஓ நிர்வாகிகள் வெற்றிகரமாக பதிவு செய்துள்ளனர். மேலும் மொத்தம் 2,42,053 கர்மயோகிகள் ஐகோட் இயங்குதளத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால், 31,368 பாடநெறிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 23,724 பாடநெறி நிறைவுகள் மற்றும் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது அதிகாரிகளிடையே தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதற்கான வலுவான ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
இந்த தளம் நிர்வாகம் மற்றும் நிர்வாக திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு வகையான படிப்புகளை வழங்குகிறது. உள்ளடக்கம் மற்றும் அணுகலை உறுதி செய்வதற்காக, மிஷன் கர்மயோகி தளத்திலிருந்து 25 பாடத் தொகுதிகளை இந்தி வசனங்களுடன் பீகார் பொது நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம் (BIPARD) முழுமையாக மொழிபெயர்த்துள்ளது. இது பீகார் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அதிக பார்வையாளர்களுக்கு இந்த படிப்புகளின் வரம்பை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதன் மூலம், திறன் மேம்பாட்டு ஆணையம், கர்மயோகி பாரத் மற்றும் பீகார் அரசு ஆகியவற்றுக்கு இடையேயான நீண்டகால கூட்டாண்மை உருவாவதன் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த ஒத்துழைப்பு பீகாரின் குடிமைப் பணியாளர்களுக்கு தொடர்ச்சியான கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும். இறுதியில் சிறந்த பொதுச் சேவை வழங்கலை உறுதி செய்யும். மிஷன் கர்மயோகி முன்முயற்சியின் கீழ் டிஜிட்டல் பயிற்சி திட்டங்கள் மிகவும் திறமையான பணியாளர்களை வளர்ப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகின்றன. இதன் மூலம் இந்திய மக்களுக்கு சிறந்த ஆளுகை மற்றும் சேவை வழங்கலை செயல்படுத்துகிறது.
***
(Release ID: 2083603)
TS/PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2083663)
आगंतुक पटल : 56