உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)

Posted On: 11 DEC 2024 4:14PM by PIB Chennai

26/11 மும்பை தாக்குதல்களை அடுத்து தேசிய புலனாய்வு முகமை சட்டம், 2008-ன் கீழ் மத்திய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட அமலாக்க நிறுவனமாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அமைக்கப்பட்டது.

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அயல்நாடுகளுடனான நட்புறவு, சர்வதேச ஒப்பந்தங்கள் போன்றவற்றை பாதிக்கும் குற்றங்களை இந்த அமைப்பு புலனாய்வு செய்து தண்டனை அளிக்கிறது.

இந்தியாவுக்கு வெளியே இந்திய குடிமக்கள் அல்லது இந்திய நலன்கள் சம்பந்தப்பட்ட பட்டியலிடப்பட்ட குற்றங்களை விசாரிக்க என்ஐஏ (திருத்தம்) சட்டம், 2019 மூலம் என்ஐஏவுக்கு அரசு அதிகாரம் அளித்துள்ளது. மேலும், வெடிபொருள் சட்டம், 1908, மனித கடத்தல், இணையதள பயங்கரவாதம் மற்றும் ஆயுதங்கள் சட்டம், 1959 தொடர்பான குற்றங்களை விசாரிக்கவும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

என்.ஐ.ஏ தலைமையகம் புது தில்லியில் உள்ளது, குவஹாத்தி மற்றும் ஜம்முவில் 02 மண்டல அலுவலகங்கள் மற்றும் நாடு முழுவதும் 21 கிளை அலுவலகங்கள் உள்ளன. அவற்றில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 13 புதிய கிளை அலுவலகங்கள் மற்றும் 02 மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

என்.ஐ.ஏ.வில் தற்போது மொத்தம் 1901 அனுமதிக்கப்பட்ட பதவிகள் உள்ளன. அவற்றில் 664 பதவிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நியமிக்கப்பட்டன.

2009-10-ம் ஆண்டில் என்.ஐ.ஏ.வுக்கு ரூ.12.09 கோடி நிதியை அரசு வழங்கியது. 2014-15-ம் ஆண்டில் ரூ.91.32 கோடியாக இருந்த இந்த ஒதுக்கீடு தற்போது 2024-25-ம் நிதியாண்டில் ரூ.394.66 கோடியாக கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

என்.ஐ.ஏ தொடங்கப்பட்டதிலிருந்து, 640 வழக்குகளை பதிவு செய்துள்ளது, இதில் 147 வழக்குகளில் 95.23 அளவிற்கு தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083245

***

IR/RJ/DL


(Release ID: 2083522) Visitor Counter : 29


Read this release in: English , Urdu , Hindi