கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் மூலம் மக்கள் மருந்தகங்கள்

Posted On: 11 DEC 2024 5:18PM by PIB Chennai

கிராமப்புற மக்களுக்கு மலிவு விலையில் பொதுவான மருந்துகளை வழங்குவதற்காக, மத்திய அரசின் ரசாயனம், உரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துகள் துறை பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களை செயல்படுத்த தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கு உதவியுள்ளது.

தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் 13 கோடிக்கும் அதிகமான சிறு, குறு விவசாயிகளைக் கொண்ட பரவலான கிராமப்புற கட்டமைப்பையும், இடம், கட்டடம், சேமிப்பு வசதிகள் போன்ற உள்கட்டமைப்புகளையும் கொண்டவையாகும். இவை மக்கள் மருந்தக மையங்களை நிறுவி அவற்றை செயல்படுத்தலாம். இது அணுகல் குறைவாக உள்ள தொலைதூர பகுதிகளில் மலிவு விலை மருந்து மையங்களாக செயல்படுகிறது. தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் நம்பிக்கையும் கிராமப்புற மக்களுடனான அதன் உறவும் இந்த மக்கள் மருந்தக மையங்களின் வெற்றியை உறுதி செய்ய உதவுகிறது.

மக்கள் மருந்தக உரிமையாளர்களுக்கு ஒவ்வொரு மருந்தின் அதிகபட்ச சில்லறை விலையில் (வரிகள் நீங்கலாக) 20 சதவீதம் லாபம் வழங்கப்படுகிறது. மருந்துக் கடைகளில் பொதுவாக விற்கப்படும் மருத்துவப் பொருட்களை விற்கவும் அனுமதி உண்டு. எனவே, இந்த விதிகள் தொடக்க வேளாண் கடன் சங்கங்களால் இயக்கப்படும் மக்கள் மருந்தகங்களின் நிலைத்தன்மையையும் லாபத்தையும் உறுதி செய்கின்றன.

இந்த முன்முயற்சி தேசிய சுகாதாரக் கொள்கையின் இலக்கான அனைவருக்கும் தரமான சுகாதார சேவை என்பதற்கு ஏற்ப அமைந்துள்ளது. மலிவு விலையில் மருந்துகள் பின்தங்கிய கிராமப்புற மக்களைச் சென்றடைவதை இது உறுதி செய்கிறது. இதன் மூலம் பரந்த பொது சுகாதார நோக்கங்கள் நிவர்த்தி செய்யப்படுகிறது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.

----

TS/PLM/KPG/DL


(Release ID: 2083521) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi